கீல்வாதம் ஏன் ஏற்படுகிறது? தீர்வென்ன?

பெரும்பாலும் 40 முதல் 50 வயதை தொடும் ஆண், பெண்களுக்கு கீல்வாதம் ஏற்படுகிறது.

உயர் ரத்த அழுத்தம் காரணமாகவும் ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரிப்பாலும் மூட்டுகளில் ஒருவகையான உப்பு படிமானம் ஏற்பட்டு மூட்டுகள் வீங்கி வலி ஏற்படும்.

மனக்கவலை, மன அழுத்தம் காரணமாகவும் உடல் எடை அதிகரிப்பாலும் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

ரத்த அழுத்திற்கான மாத்திரை எடுத்துக் கொள்வதோடு, அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

சீரகம் தண்ணீர் காய்ச்சி தினமும் 3 லிட்டர் வரை குடித்தால், ரத்தத்திலுள்ள யூரிக் அமிலம் சிறுநீர் வழியாக வெளியேறும்.

மூட்டுகளில் படியும் யூரிக் உப்பு மூட்டு தேய்மானத்தை ஏற்படுத்தி விடும். பின், அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது வரும்.

ஆட்டிறைச்சி, மீன், கடல்பாசி உண்பதை தவிர்க்க வேண்டும்.

மன அழுத்தமும் மூட்டு நோய்களுக்கு காரணம்; எனவே, மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.