முன்னேற்றத்துக்கான ரகசியம் என்ன? மார்க் ட்வைனின் தன்னம்பிக்கை வரிகள்!

வாழ்க்கையில் வெற்றி பெற இரண்டு விஷயங்கள் தேவை; ஒன்று அறியாமை, மற்றொன்று தன்னம்பிக்கை.

உண்மையைப் பேசினால், எதையும் நினைவில் வைத்திருக்க வேண்டியதில்லை.

முன்னேற்றத்துக்கான ரகசியம், அதை துவங்குவதில் தான் உள்ளது.

கற்றுக்கொள்வதை நிறுத்துபவர், 20 வயதாக இருந்தாலும் சரி, 80 வயதாக இருந்தாலும் சரி, அவர் வயதானவரே. தொடர்ந்து கற்றுக்கொள்பவர் இளமையாகவே இருப்பர்.

எப்போதும் சரியானதை மட்டுமே செய்யுங்கள். இது சிலருக்கு மகிழ்ச்சியளிக்கும்; மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தும்.

ஒவ்வொரு நாளையும் வாழ்வின் மிக அழகான நாளாக மாறுவதற்கான வாய்ப்பை, உங்களுக்கு நீங்களே கொடுங்கள்.

உன்னைப் பற்றி நீயே திருப்தியாக உணராமல் இருப்பதுதான் மிக மோசமான தனிமை.