மருத்துவ காப்பீடு கிளைம் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்வது?
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால், எல்லா செலவுகளுக்கும் மருத்துவ காப்பீட்டில் கிளைம் கிடைக்கும் என்பது தவறான எண்ணம்.
எந்த சிகிச்சைகளுக்கு காப்பீட்டு பாதுகாப்பு வழங்கப்படும் என்பது பாலிசி விதிமுறைகளை பொறுத்தது. பொதுவாக, கிளைம் பெற 24 மணி நேர மருத்துவமனை அனுமதி அவசியம்.
ஆனால், சில மணி நேரங்களிலேயே முடியும் 'டே கேர்' சிகிச்சைகளுக்கும் காப்பீட்டு பாதுகாப்பு கிடைக்கலாம். எனினும், அனைத்து டே - கேர் சிகிச்சைகளும் காப்பீட்டின் கீழ் வராது.
உங்கள் பாலிசியில் அந்த சிகிச்சை, இடம் பெற்றுள்ளதா, விலக்கு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை முதலில் சரிபார்க்க வேண்டும்.
சில சிகிச்சைகளுக்கு காத்திருப்பு காலம் இருக்கும்.
குறிப்பிட்ட பாதிப்புகளுக்கான அறுவை சிகிச்சை காப்பீட்டு பாதுகாப்பின் கீழ் வந்தால், விதிமுறைகளின்படி கிளைமை ஏற்க வேண்டுமென, எழுத்துப்பூர்வமாக கோரிக்கை அனுப்பலாம்.
கிளைம் ஏற்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பதை எழுத்துப்பூர்வமாக பெற்றுக் கொள்வது, அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு உதவும்.