அதிக பலன் தருவது இன்சூரன்ஸா? மியூச்சுவல் பண்டுகளா?
இன்சூரன்ஸும், மியூச்சுவல் பண்டுகளும் வேறு வேறு பிரிவுகள். ஒன்று, வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மையை கருதி, குடும்ப நலனுக்காக செய்யப்படும் சின்ன முன்னேற்பாடு.
இரண்டாவது, உங்கள் எதிர்கால நிதி தேவைகளை கருத்தில் கொண்டு செய்யப்படும் வளர்ச்சிக்கான கருவி.
பிரச்னை எங்கே வருகிறது என்றால், 'இன்சூரன்ஸை நான் பயன்படுத்தவே இல்லை, அல்லது அதற்கான தேவை வாழ்க்கை முழுக்க ஏற்படவில்லை என பலர் கூறுவர்.
அப்போது, கட்டிய பிரீமியம் தொகை வீணாகத்தானே போகிறது? யாரோ அனுபவிப்பதற்கு பதில் அதை நானே திரும்ப பெற்றால் என்ன?' என்ற கேள்விகள் எழக்கூடும்.
அதனால், இன்சூரன்ஸும், மியூச்சுவல் பண்டுகளும் கைகோர்த்துக் கொள்கின்றன.
இவ்விரண்டு பிரிவுகளின், கடந்த 30 ஆண்டுகால வருவாய் ஈட்டும் திறனை பார்க்கும் போது, மியூச்சுவல் பண்டு முதலீடுகள் கூடுதல் லாபத்தை ஈட்டி தந்திருப்பது தெரிகிறது.
அதில் கட்டணங்கள் தெளிவானவை. இன்சூரன்ஸ் பிளஸ் முதலீட்டு திட்டங்களில் கட்டணங்கள் அதிகம். ஈட்டிய வருவாயும் குறைவு.
அதேவேளையில், இன்சூரன்ஸையும், மியூச்சுவல் பண்டையும் தனித்தனியே வைத்துக்கொள்வது தான் உகந்தது.