மறக்காமல் பார்க்க வேண்டிய பட்டியலில் ஒன்றாக ஹம்பி இருப்பது ஏன்?
யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்று ஹம்பி நகரம். கிழக்கு கர்நாடகாவின் விஜயநகரா மாவட்டத்தில், துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்துள்ளது இது.
பல்வேறு புராதன கோவில்கள் மற்றும் சிற்பங்கள் நிறைந்த இந்த நகரம் சுற்றுலாப் பயணிகள் பார்க்க வேண்டிய பட்டியலில் ஒன்றாக உள்ளது. ராமாயணத்தில் ஹம்பி நகரம் பற்றிய குறிப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.
விஜயநகர பேரரசின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றும் 1,600 சின்னங்கள் இங்கு உள்ளன. இதில் பிரம்மாண்ட கோபுரங்கள், சிற்ப வேலைபாடுகள், கோவில்களும் அடங்கும்
15ம் நூற்றாண்டில் சீனாவின் பெய்ஜிங் நகரை அடுத்து ஆசிய கண்டத்திலேயே ஆடம்பரமான நகராக விளங்கியது ஹம்பிதான். இங்கு அப்போது பெர்சியர்கள் பலரும் வணிகம் செய்துள்ளனர்.
1565ம் ஆண்டு இந்தியாவுக்குள் புகுந்த இஸ்லாமிய சுல்தான் மன்னர்கள் விஜயநகர பேரரசை வீழ்த்தி, ஹம்பி நகரை சிதைத்தனர்.
இருப்பினும், இன்றும் பல நினைவுச் சின்னங்கள் அழியாமல் உள்ளன. இது அக்கால கட்டடக் கலையின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றுகிறது என்றால் மிகையில்லை.
கற்பாறைகள் நிறைந்த மலைகள் மற்றும் பசுமையான வயல்களின் பின்னணியில் அமைந்துள்ளதால், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களை வெகுவாக ஈர்க்கிறது.
விருபக்ஷா கோவில், விஜய விட்டலா கோவில், லோட்டஸ் மஹால், ஹனுமன் கோவில், சிரிக்கும் புத்தர் கோவில், ஹம்பி மார்கெட் உட்பட பல்வேறு இடங்கள் சுற்றுலாப் பயணிகளைக் கவருகின்றன.
புராதன இடிபாடுகளுக்கு மேல் சூரியன் உதயமாவதும், ராட்சத பாறைகளின் பின்னணியில் மறையும் அஸ்தமனத்தையும் பார்ப்பது பிரமிக்க வைக்கும் அனுபவமாகும்.