மொபைல் போனில் மூழ்கும் குழந்தைக்கு மாறுகண் வருமா?

நீண்ட நேரம் மொபைல் போன் பயன்படுத்தும் போது, கண் தசைகளில் அதிக அழுத்தம் ஏற்பட்டு, உள்நோக்குவதால் மாறுகண் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அதிக நேரம் கண்களை ஒரே இடத்தில் குவிப்பதால் கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படும். கண் தசைகளில் அழுத்தம் ஏற்பட்டு, கண்கள் உள்நோக்கி மாறலாம்.

பள்ளியில் கரும்பலகை தெரியாமை, எழுத்துகள் தெளிவாக தெரியாதது, படிப்பில் கவனம் குறைவது போன்ற பிரச்னைகள் வரக்கூடும்.

மொபைல் போன் பழக்கத்தை குறைக்காவிட்டால், மேலும் மோசமான விளைவுகள் உண்டாகும் எனவும் கூறப்படுகிறது.

மொபைல் போனுக்கு அடிமையாவதைத் தடுக்க அவர்களுக்கு ஓவியம், இசை, போன்ற பயிற்சிகளை அறிமுகப்படுத்துங்கள்.

குறிப்பாக, உணவு உண்ணும் போதும், தூங்கும் போதும் போனை தரக்கூடாது.

வீட்டில் உள்ள பெரியவர்களும் குழந்தைகள் முன்னால் போன் பயன்படுத்துவதைக் குறைத்து, அவர்களுடன் அதிக செலவிடுங்கள்.