உங்களின் இதயத்தில் எழுதுங்கள்... ரால்ப் வால்டோ எமர்சனின் தன்னம்பிக்கை வரிகள்

பிரச்னைகளால் உந்தப்படுபவராக இல்லாமல், உங்கள் கனவுகளால் வழி நடத்தப்படுபவராக இருங்கள்.

எங்கே செல்கிறோம் என்பதை அறிந்த மனிதனுக்கு இந்த உலகமே வழி ஏற்படுத்திக் கொடுக்கும்.

தோல்விகள் வெற்றிகளுக்கான முன்னேற்பாடு என்பதை உணரும்போது மனிதர்கள் வெற்றி பெறுகிறார்கள்.

நீங்கள் கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது விநாடிகள் உங்களின் மன அமைதியை இழக்கிறீர்கள்.

ஒவ்வொரு நாளுமே இந்தாண்டின் மிகச்சிறந்த நாள்தான் என உங்களின் இதயத்தில் எழுதுங்கள்.

உங்களை வேறு ஏதாவது ஒன்றாக மாற்றியமைக்க தொடர்ந்து முயற்சிக்கும் இவ்வுலகில், நீங்கள் நீங்களாக இருப்பதே மிகப்பெரிய சாதனை.

நன்றாக வாழுங்கள், நிறைய கற்றுக்கொள்ளுங்கள், அடிக்கடி சிரியுங்கள், அதிகமாக நேசியுங்கள்.

பொறுமையும், மனவலிமையும் அனைத்தையும் வெல்லும்.

சிறந்த நபரைத் தேர்ந்தெடுக்காதீர்கள், உங்களைச் சிறந்த நபராக மாற்றக் கூடிய நபரைத் தேர்ந்தெடுங்கள்.