பிரசவ காலத்தில் சினைப்பையில் உருவாகும் கட்டியால் பிரச்னையா?

கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தின் முதல் மாதத்தில் இருந்தே டாக்டரின் ஆலோசனை பெற்று கருவின் வளர்ச்சியை கண்காணிக்க வேண்டும்.

சிலருக்கு சினைப்பையில் கட்டி இருப்பதை உணர்ந்தால் உடனடியாக டாக்டரிடம் ஆலோசனை பெற்று ஸ்கேன் மூலம் கட்டியின் அளவு மற்றும் வகை குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.

ஸ்கேன் செய்யும் போது, சினப்பையில் கட்டி இருப்பதை எளிதாக கண்டறியலாம்.

தொடர்ந்து, ஆபரேஷன் வாயிலாக அதை அகற்றலாம். அதேவேளையில் கருவிலுள்ள குழந்தையின் ஆரோக்கிய நிலை குறித்து அவ்வப்போது கண்காணிக்கப்படும்.

எனவே, கர்ப்ப காலத்தில் ஏற்படும் கட்டிகள் குறித்து கர்ப்பிணிகள் அச்சப்பட தேவையில்லை.

டாக்டரின் முறையான ஆலோசனை பெற்று அவர்கள் பரிந்துரை செய்யக்கூடிய சிகிச்சையின் மூலம் அவற்றை எளிதாக சரி செய்து கொள்ளலாம்.