நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கார்போஹைட்ரேட் உணவுகள்
நீரிழிவால் பாதிக்கப்பட்ட பலரும் தங்கள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த சரியான உணவைத் தேர்ந்தெடுப்பதில் பெரும்பாலும் குழப்பமடைகின்றனர்.
அதேவேளையில், கார்போஹைட்ரேட் உணவுகளை தேர்ந்தெடுப்பதில் பலத்த குழப்பம் நிலவுகிறது. ஏனெனில் இவை ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும்.
நீரிழிவு குறைப்பாடு கொண்டவர்கள் ஒரு உணவிற்கு 45-60 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் சிற்றுண்டிக்கு 15-20 கிராம் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.
எனவே, ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் உணவுகள் இதோ...
சர்க்கரை வள்ளிக்கிழங்கு... இது செரிமானத்திற்கு உதவுகிறது. ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் எடை குறைக்க உதவுகிறது.
நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் கார்போஹைட்ரேட் உணவுகளை பெற மற்றொரு ஆரோக்கியமான வழி பருப்பு வகைகள் ஆகும். பருப்பு, கொண்டைக்கடலை தினசரி உணவுக்கு சிறந்த தேர்வாகும்.
பாஸ்தா... எப்போதாவது ஒரு முறை என்றால், முழு தானியங்களாலான பாஸ்தாவை உட்கொள்ளலாம்; இதில் குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ளதால் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும்.
குயினோவா ஒரு முழுமையான புரதம் கொண்ட பல்துறை தானியமாகும். இது ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.