குட்டீஸ்களுக்கு பிடித்தமான வாழைப்பழ பூரி

தேவையானப் பொருட்கள்: மைதா மாவு - 2 ஆழாக்கு, பொடித்த சர்க்கரை, தயிர், ஏலக்காய் தூள் மற்றும் சமையல் சோடா - சிறிதளவு.

கனிந்த வாழைப்பழம் - 1, உப்பு, எண்ணெய் தேவையான அளவு.

மைதா மாவுடன் வாழைப்பழம், சர்க்கரை, தயிர், பொடித்த ஏலக்காய், சமையல் சோடா, உப்பு ஆகியவற்றை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு பிசையவும்.

இதை மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.

பின், மாவை மறுபடியும் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பூரி தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

இப்போது, சுவையான வாழைப்பழ பூரி ரெடி.

இதை மாலை நேர சிற்றுண்டியாக கொடுத்தால், குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவர்.