மொறுமொறு ஆனியன் ரிங்ஸ்..!

5 வெங்காயத்தை வட்டமாக வெட்டி, தனித்தனி வளையங்களாகப் பிரித்துக்கொள்ளவும். பிறகு அதில் சிறிது மைதா மாவைத் தூவி கிளறி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் 200 கிராம் மைதா, 2 ட்ஸ்பூன் சில்லி பிளேக்ஸ், 2 ட்ஸ்பூன் ஆரிகேனோ, 1 ட்ஸ்பூன் மிளகுத்தூள், நசுக்கிய பூண்டு, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு பிசைந்துகொள்ளவும்.

பின்னர் வெங்காயத் துண்டுகளை ஒவ்வொன்றாக அந்த மாவில் தோய்த்து, ரொட்டித்தூளில் நன்றாக புரட்டி எடுத்து, எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

மொறுமொறு ஆனியன் ரிங்சுடன் சேர்த்து சாப்பிட, ஆனியன் மயோனைஸ் டிப் செய்முறை...

கடாயில் 1 ட்ஸ்பூன் வெண்ணெய்யைப் போட்டு உருகியதும், 1 பிரியாணி இலை, 1 ட்ஸ்பூன் சில்லி பிளேக்ஸ், பொடிதாக நறுக்கிய 1 வெங்காயம், 1 பச்சை மிளகாய், உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

பின்னர் அந்தக் கலவையில் 4 ட்ஸ்பூன் மயோனைஸ், 2 ட்ஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்துக் கலக்கவும்.

இப்பொழுது 'ஆனியன் மயோனைஸ் டிப்' தயார். மொறுமொறு ஆனியன் ரிங்சுடன், ஆனியன் மயோனைஸ் டிப் சேர்த்து பரிமாறலாம்.