வெள்ளரிக்காய் சாதம்... செய்வது ரொம்ப ஈஸி !
தேவையானப் பொருட்கள்: வெள்ளரிக்காய் - 2, நெய் - 2 டீஸ்பூன், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு தலா - 1 டீஸ்பூன், சிவப்பு மிளகாய் - 2, இஞ்சி - 1 துண்டு.
பச்சை மிளகாய் - 3, பெருங்காய தூள் - 1 பின்ச் அளவு, பெரிய வெங்காயம் - 1, பாஸ்மதி அரிசி - 2 கப், எண்ணெய் -தேவையானளவு.
வெள்ளரிக்காயை நன்கு துருவிக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெய், நெய் ஊற்றி ஊற்றி சூடானவுடன், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு சேர்த்து தாளிக்கவும்.
இதனுடன் பெருங்காய பவுடர், தோல் சீவிய இஞ்சி, கறிவேப்பிலை, மிளகாய் சேர்த்து நன்கு கிளறவும்.
பின், துருவிய தேங்காய், வெள்ளரிக்காயை போட்டு கிளறி, இதனுடன் வேக வைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து வேக விடவும்.
ஐந்து நிமிடங்களுக்கு அரிசி வெந்தவுடன் நறுக்கிய கொத்தமல்லி இலை, வறுத்த முந்திரி சேர்த்தால் வெள்ளரிக்காய் சாதம் ரெடி.