இன்று உலக மண் தினம்...

உலகத்தில் அதிக சகிப்புத் தன்மை கொண்டதாக, பூமி முழுவதும் பரவி கிடக்கும் 'மண்'ணைதான் குறிப்பிட்டாக வேண்டும்.

உலகம் முழுவதும் உள்ள மண்ணை, 12 வகைகளாகப் பிரித்துள்ளனர்.

மழை, வெயில், காற்று போன்றவற்றின் காரணமாக, மண் தன்மையிலும் இந்த வேறுபாடு இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.

அந்த மண் தன்மைக்கு ஏற்ப, அதில் வளர்வதற்கான செடி, கொடிகளை மண் ஏற்றுக்கொள்கிறது.

தாவரங்களுக்கு மண்ணில் இருந்து, நைட்ரஜன், மக்னீசியம், கந்தகம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, மாங்கனீசு, தாமிரம், குளோரின், போன்ற சத்துக்கள் நேரடியாகக் கிடைக்கின்றன.

மண்ணின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்தான், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5-ந் தேதி, 'உலக மண் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது.