குளிர்காலத்தில் பல் வலி அதிகம் வருமா?
நமது பற்களுக்கு இயற்கையாகவே தட்ப வெப்ப நிலைகளை ஏற்றுக் கொள்ளும் திறன் உள்ளது.
நமது பற்கள் 70 டிகிரி செல்சியஸ் கொண்ட சூடான காபியையும், 1.5 டிகிரி செல்சியஸ் கொண்ட குளிர்ந்த நீரையும் தாங்கும் சக்தி கொண்டவை.
குளிர் காற்றில் நிற்கும் பொழுதோ குளிரில் வெளியே செல்லும் பொழுதோ, இந்த தட்ப வெப்பம் மிகக் குறுகிய காலத்தில் மிக வேகமாக மாறும்.
அப்பொழுது பற்களின் மேல் ஒரு வித அழுத்தம் ஏற்படும். நாளடைவில் இந்த அழுத்தம் பற்களுக்குள் கண்ணுக்கு தெரியாத அளவிலான விரிசல்களை உண்டாக்கும்.
இவையே வலி மற்றும் கூச்சம் வருவதற்கு காரணமாகும். இதனை தடுக்க அந்த விரிசங்களை அடைக்கும் விதமாக பற்களின் மேல் 'சீலன்டஸ்' எனப்படும் ஒரு வகை மருந்தினை பூச வேண்டும்.
பல் மருத்துவரின் ஆலோசனைப் படி சரியான இடைவெளியில் இதனை செய்தால் நல்ல பலன் இருக்கும்.
பல் கூச்சத்திற்கான பிரத்யேகமான பேஸ்ட்கள் உள்ளன. அவற்றை சரியான முறையில் பயன்படுத்தினால் கூச்சம் குறையும்.
அதையும் கடந்து கூச்சம் ஏற்பட்டால் பற்களில் சொத்தையோ அல்லது பெரிய விரிசலோ உள்ளதா என சோதனை செய்து பின்னர் அதற்கு ஏற்றவாறு சிகிச்சை செய்யலாம்.