சுவையான சமையலுக்கு எளிய குறிப்புகள்..

பஜ்ஜி மாவில் ஒரு கரண்டி அளவு தோசை மாவு சேர்த்தால், பஜ்ஜி உப்பலாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்கும்.

வடைக்கு மாவு அரைக்கும் போது, தண்ணீர் சிறிது அதிகமாகி விட்டால், ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து கலந்தால் மாவு இறுகி விடும்.

பொங்கல் செய்யும் போது, தண்ணீர் அதிகமாகி விட்டால், அதனுடன் சிறிதளவு வறுத்த ரவையை கலந்து விட்டால் கெட்டியாகி விடும்.

குக்கரில் கருணை கிழங்கை வேகவைத்து, அதை மசால் வடை மாவுடன் சேர்த்து வடை சுட்டால், வித்தியாசமான சுவையில் இருக்கும்.

இட்லி உப்புமா செய்யும் போது, காய்கறிகளை பொடியாக நறுக்கி வதக்கி சேர்த்துக் கொண்டால் சுவையாக இருக்கும்.

டயட்டில் இருப்பவர்கள் கொண்டைக்கடலை சேர்த்து கொண்டால் பசியை கட்டுப்படுத்தும்.

ஆப்பம் செய்யும் போது, ஒரு ஸ்பூன் தயிரை சேர்த்துக்கொண்டால், ஆப்பத்தின் உட்புறம் நன்கு வெந்து மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.

வடகம் மாவில் சிறிது சோம்பு கலந்து காயவைத்து பொரித்து சாப்பிடும் போது சுவையாக இருக்கும்.