இயற்கை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் இந்துப்பு; பயன்கள் அறிவோமா...
இந்துப்பு சித்தா மற்றும் ஆயுர்வேத முறையில் மருந்துகள் தயாரிக்கும் போது, கூட்டுக்கலவையாக பயன்படுத்தப்படுகிறது.
இந்துப்பில், கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சல்பர், புளோரைடு மற்றும் அயோடின் போன்ற தாதுக்களுடன், சோடியம் குளோரைடும் அதிக அளவில் உள்ளது.
மனிதருக்கு நலம் தரும், 80 வகையான கனிம தாதுக்கள் மற்றும் சத்துக்களை கொண்டுள்ளது.
இது, எளிதில் செரிமானமாகும் திறனுள்ளது மற்றும் மனச்சோர்வை நீக்கும் தன்மையுடையது.
மேலும், இந்துப்பை தினமும் உணவில் உபயோகித்து வந்தால், வாதம், பித்தம் மற்றும் கபம் எனும் வியாதிகளின் தன்மைகள் நீங்கி, உடலை வலுவாக்க உதவுகிறது.
குளிக்கும் முன், இந்துப்பை உடலில் தேய்த்து சற்று நேரம் கழித்து குளித்து வர, உடல் அசதி நீங்கி, மனமும் உடலும் புத்துணர்ச்சி பெறும்.
இந்துப்பு கலந்த இளஞ்சூடான வெந்நீரால் வாய் கொப்பளித்து வர, வாய் துர்நாற்றம் நீங்கும்.
பல் வலிகள், ஈறு வீக்கம் போன்ற வாய் சம்பந்தமான நோய்கள் விரைவில் குணமாகும்.
மூல நோய் மற்றும் வயிற்றுப் புண் நீங்க, இந்துப்பு மருந்தாக பயன்படுகிறது.