உலர் விதைகள் மற்றும் கொட்டைகளை உட்கொள்ள இதோ சில டிப்ஸ்

பூசணி விதைகள்... இதை அப்படியே பச்சையாகவும் சாப்பிடலாம்; இல்லாவிட்டால், அளவான எண்ணெய், உப்பு சேர்த்து குறைவாக தணலில் வறுத்தும் சாப்பிடலாம்.

சாலடு, தயிர், ஓட்ஸ், ஸ்மூத்தி ஆகியவற்றில் 1 - 2 டேபிள் ஸ்பூன் சேர்த்தும் சாப்பிடலாம்.

சூரியகாந்தி விதைகள்... உப்பு சேர்க்காமல் பச்சையாகவோ அல்லது குறைந்த எண்ணெய் சேர்த்து வறுத்தோ சாப்பிடலாம்.

சாலடு, தயிர், ஓட்ஸ், ஸ்மூத்தி ஆகியவற்றில் 1 - 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து சாப்பிடலாம். செரிமான பிரச்னை இருந்தால், சிறிதளவு எடுத்து நன்றாக மென்று சாப்பிடவும்.

பாதாம்... சிறந்த செரிமானம் மற்றும் ஊட்டச்சத்தை உறிஞ்ச 4 - 6 பாதாம்களை இரவு முழுதும் ஊறவைத்து, காலையில் தோலை நீக்கி சாப்பிடவும்.

ஸ்மூத்தி, ஓட்ஸ், சாலடுகளில் அரைத்தோ, அல்லது பொடியாக நறுக்கியோ சேர்த்து சாப்பிடலாம்.

ஆளிவிதை... பொதுவாக இவற்றை வறுத்து அப்படியேவோ அல்லது பொடியாகவோ பயன்படுத்த வேண்டும்; அப்படியே உட்கொள்ளும்போது சரிவர செரிமானமாகாது.

தயிர், ஓட்ஸ், ஸ்மூத்திகள் மாவு, சட்னியில் வறுத்த அல்லது பொடியை 1 - டேபிள் ஸ்பூன் சேர்க்கலாம்.

விருப்பப்பட்டால் ஆளி விதை பொடியை 10 - 15 நிமிடங்கள் வரை தண்ணீரில் ஊற வைத்து உட்கொள்ளலாம்.

வால்நட்ஸ்... தினமும் 1 அல்லது 2 அப்படியேவோ அல்லது இரவு முழுதும் ஊற வைத்தோ சாப்பிடலாம். ஊற வைத்து சாப்பிட எளிதாக செரிமானமாகும்.

சாலடு, தயிர், ஓட்ஸ், ஸ்மூத்திகளில் சேர்த்தும் சாப்பிடலாம்.

சியா விதைகள்... தண்ணீர் அல்லது பாலில், 1.5 கப்புக்கு 1 டேபிள் ஸ்பூன் வீதம், 20 - 30 நிமிடங்கள் ஊறவைத்து சாப்பிடலாம். சாலடு, தயிர், ஓட்ஸ், ஸ்மூத்தி மற்றும் புட்டிங்களில் சேர்க்கலாம்.