சுவாசப்பாதை தொற்றை எப்படி சரி செய்வது?
மூக்கு, தொண்டையை பாதிக்கும் தொற்று மேல் சுவாசப் பாதை தொற்று.
இதனால், தும்மல், மூக்கு ஒழுகுதல் அல்லது அடைப்பு, தொண்டை வலி, இருமல், காய்ச்சல், தலைவலி, உடல்சோர்வு, குரல் கரகரப்பு, முகத்தில் வலி ஏற்படலாம்.
இதற்கு போதுமான ஓய்வு, நீராவி பிடித்தல், அதிக தண்ணீர் குடித்தல் போதுமானது.
பெரும்பாலும் இவை வைரஸ் கிருமிகளால் ஏற்படுவதால் டாக்டரின் அனுமதியின்றி ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது.
காற்றுக் குழாய் நுரையீரல் போன்ற உறுப்புகளை பாதிக்கும் தொற்று கீழ் சுவாசப்பாதை தொற்று.
இந்த தொற்றால் தொடர்ந்து இருமல் அதிக காய்ச்சல், சளியுடன் இருமல், சளியுடன் ரத்தம் கலந்து வருவது, மூச்சுதிணறல், மார்பு வலி போன்ற அறிகுறிகள் இருக்கும்.
இது பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்களையும், குழந்தைகளையும், நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஸ்டீராய்டு மாத்திரை எடுப்பவர்களை தாக்ககூடும்.
குழந்தை பருவத்தில் முறையான தடுப்பூசிகள் செலுத்தினால் இவ்வாறான நோய்கள் வராமல் பாதுகாக்கலாம்.