தன்னம்பிக்கையை அதிகரித்து நம்மை நாமே நேசிப்பது எப்படி?
மனதுக்கு மகிழ்ச்சி தரும் செயலை செய்வது, பிடித்த இசை கேட்பது, விரும்பமான உணவு சாப்பிடுவது, ஷவரில் குளிப்பது போன்ற சிறிய விஷயங்கள் நம் முக்கியத்தை நமக்கு உணர்த்தும்.
கூனி, குறுகி அமராமல், நிமிர்ந்து அமர்வது, நிற்கும் போது தோள்களை குறுக்காமல் நிமிர்ந்து நிற்பது தன்னம்பிக்கையைத் தரும்.
இதனால், மூளையில் உற்சாகம் தரும் வேதிப்பொருட்கள் அதிகம் சுரந்து, என்னால் எதையும் எதிர்கொள்ள முடியும் என்ற சமிக்ஞையை மூளைக்கு அளிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
தினமும் 20 நிமிட நடை, ஸ்ட்ரெச்சிங், நடனம், சில ஸ்குவாட்ஸ் என்று ஏதாவது ஒரு வகையில் உடலை வளைப்பது மனநிலையை உற்சாகம் அடையச் செய்யும்.
இது உள்ளேயும் வெளியேயும் வலிமையாக நம்மை உணரச் செய்யும். பதட்டமாக உணரும் போது சுவாசப்பயிற்சி செய்யலாம்.
பாதங்களை தரையில் அழுத்தமாக ஊன்றி, நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்னால் இதைச் செய்ய முடியும் என்று சொல்ல வேண்டும்.
முடியாத விஷயத்திற்கு 'நோ' சொல்லப் பழக வேண்டும். தன்னம்பிக்கை என்பது நாம் பிறக்கும் போது கூடவே பிறந்ததில்லை. படிப்படியாகத்தான் வளர்க்க வேண்டும்.
குழந்தைகள் பேசுவதை பெற்றோர் காது கொடுத்துக் கேட்பது, அன்பான வார்த்தைகள் போன்றவை இளம்வயதினருக்கு அவர்களைப் பற்றிய எதிர்மறை எண்ணங்களை மாற்ற உதவும்.