வேகமாக சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு உகந்ததா ?

உணவின் தரம் போல, சாப்பிடும் முறையும் முக்கியம்.

சிலருக்கு வேகமாக சாப்பிடும் பழக்கம் இருக்கலாம்.

ஆனால், இது உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்ததல்ல.

செரிமான கோளாறு, ரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்வு, அதிகமாக சாப்பிடுதல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலை தெரிவித்துள்ளது.

வேகமாக சாப்பிடும் போது சரியாக மெல்லாமல் விழுங்குவதால், உணவு பெரிய துண்டுகளாகவும், அதனுடன் சேர்ந்து காற்றும் வயிற்றுக்குள் செல்கிறது.

இவை இரண்டும் வயிற்று உப்புசம், அசவுகரியம், அதிக அமில சுரப்புக்கு காரணமாகிறது என தெரிவித்துள்ளது.