வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்ப்பதால்...!

செல்லப்பிராணிகளை வாக்கிங் அழைத்துச் செல்லும் போது, நாமும் தினமும் தன்னிச்சையாக நடக்கத் துவங்குவோம். இது நாள் முழுவதும் சுறுசுறுப்பாக உணர வைக்கும்.

அவைகளுடன் விளையாடி நேரத்தை செலவிடும்போது, மன அழுத்தம் குறைந்து அமைதி கிடைக்கக்கூடும்.

செல்லப்பிராணிகளுடன் பேசி, விளையாடும் போதும் நம்மை அறியாமலேயே உற்சாகத்தில் புன்னகைப்பதால், மகிழ்ச்சி ஹார்மோன் உற்பத்தி அதிகரித்து மனநிலை மேம்படுகிறது.

அவற்றின் அன்பும், துறுதுறு விளையாட்டும் தனிமை உணர்வை விரட்டியடிக்கும்.

அவற்றின் செயல்பாடுகள் ரிலாக்ஸ்சேஷனை அதிகரிப்பதால், ரத்த அழுத்தத்தை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

செல்லப்பிராணியுடன் வளரும் குழந்தைகளுக்கு பொறுப்புணர்வு அதிகமாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

வெளியிடங்களுக்கு அவற்றை வாக்கிங் அழைத்துச்செல்லும்போது, நாளடைவில் பலரிடமும் நட்புறவு அதிகரிக்கக்கூடும்.