குலு மணாலி செல்ல பட்ஜெட் போதலையா? இருக்கவே இருக்கு கசோல்..!

ஹனிமூன் தம்பதிகள், காதலர்களின் ஆதர்ச சுற்றுலாத் தலங்களில் ஒன்று குலு மணாலி.

தமிழகத்தில் இருந்து ஹிமாச்சல பிரதேச மாநிலத்திலுள்ள குலு மணாலி சென்றுவர இருவருக்கு குறைந்தபட்சம் ரூ. 50 ஆயிரம் தேவைப்படும். சீசன் காலத்தில் கூட்டம் நிரம்பி வழியும்.

குலு மணாலி சென்றுவர ஆசை இருந்தும் அதற்கான பட்ஜெட் இல்லாதோருக்கு வெறும் 20 ஆயிரம் ரூபாயில் குலுவுக்கு 36 கி.மீ., தொலைவில் ஓர் பட்ஜெட் சுற்றுலாத் தலம் உள்ளது.

பார்வதி நதிக்கரையில் பார்வதி பள்ளத்தாக்கின் நடுவே அமைந்துள்ள கசோல் கிராமம் குலுவுக்கு மிக அருகில் உள்ளது.

குலுவுக்கு எந்தவகையிலும் குறைவில்லா சுற்றுலாப் பகுதிகள் கசோலில் அமைந்துள்ளன. இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் இப்பகுதிக்கு வந்துசெல்வதால் கசோல், மினி இஸ்ரேல் என அழைக்கப்படுகிறது.

கசோலில் மலா கிராமம், கீரெங்கா, டோஷ் பள்ளத்தாக்கில் டிரெக்கிங் செய்யலாம். இங்கு அமைந்துள்ள இஸ்ரேலிய ரெஸ்டாரெண்ட்களில் இஸ்ரேலிய பாரம்பரிய உணவுகளைச் சாப்பிடலாம்.

புகைப்பட விரும்பிகள் டிசம்பர் மாதத்தில் பனி படந்த இமயமலைக்குச் சென்று புகைப்படங்கள் எடுக்கலாம்.