குட்டீஸ்களுக்கு பிடித்தமான மாம்பழ லட்டு

தேவையானப் பொருட்கள்: மாம்பழ கூழ், காய்ச்சிய பால், நட்ஸ் - தலா அரை கப், தேங்காய் துறுவல் - 1 கப், ஏலக்காய் துாள் - அரை டீஸ்பூன், தேங்காய் பொடி - சிறிதளவு.

அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து, தேங்காய் துறுவலை போட்டு, மிதமான தணலில் பொன்னிறமாக வதக்கவும்.

அதன் பின், மாம்பழ கூழை சேர்த்து நன்கு கலக்கவும்.

இந்த கலவையில் சுண்டக்காய்ச்சிய பால், ஏலக்காய் துாள் சேர்த்து கிளறவும்.

கலவை கெட்டியாக லட்டு பிடிக்கும் பதத்துக்கு வந்தவுடன், அடுப்பை அணைக்கவும்.

மாம்பழ கலவை ஆறிய பின், சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி, தேங்காய் பொடியில் புரட்டி எடுத்தால், சுவையான மாம்பழ லட்டு ரெடி.

இவற்றை சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்திருந்தால், சுவை அள்ளும். மாம்பழத்தில் இனிப்புத்தன்மை உள்ளதால் சர்க்கரை தேவையில்லை. குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவர்.