இன்று தேசிய குழந்தைகள் தினம்!
இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பிறந்த தினமான நவ.14, தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
நேரு குழந்தைகள் மீது அன்பும், பாசமும் கொண்டிருந்தார். குழந்தைகளும் நேருவின் மீது பற்று வைத்திருந்தனர்.
குழந்தைகளால் அவர் 'நேரு மாமா' என செல்லமாக அழைக்கப்பட்டார்.
இத்தினத்தில் நாடு முழுவதும் பள்ளிகளில் பேச்சுப்போட்டி, கவிதை, கட்டுரை, விளையாட்டு என குழந்தைகளுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
ஒரு நாட்டின் வளர்ச்சி, சமூக முன்னேற்றத்துக்கு அடித்தளமாக விளங்குவது குழந்தைகள். - நேரு
குழந்தை பருவத்தில் அவர்கள் கற்றுக்கொள்ளும் விஷயங்களே எதிர்காலத்திலும் பிரதிபலிக்கும்.
எனவே குழந்தை பருவம் முதலே அவர்களுக்கு நல்ல பண்புகளை கற்றுத் தருவது பெற்றோர், ஆசிரியரின் கடமை.
குழந்தைகள் மீது நமது எண்ணங்களை திணிக்காமல், அவர்களது விருப்பத்தை அறிந்து அதற்கேற்ப பெற்றோர் செயல்பட வேண்டும்.