இனி... அதிகமான ஆல்கஹால் கலந்த மருந்துகளுக்கு கட்டுப்பாடு!

மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, 'ஷெட்யூல் கே' எனும் பிரிவின் கீழ், 12 % ஆல்கஹால் கொண்ட மருந்துகளை, தளர்வுகளுடன் விற்பனை செய்ய அனுமதியளித்திருந்தது.

இருமல், சளி உள்ளிட்ட பல பாதிப்புகளுக்கு, அதிக, 'எத்தில் ஆல்கஹால்' பயன்படுத்தி, மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த மருந்துகள், போதைக்காக பயன்படுத்தப்படுவதாக, மத்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பின் கவனத்துக்கு சென்றது.

அதன்படி, மருந்துகளில் ஆல்கஹால் பயன்பாட்டையும், அதன் விற்பனையில் கட்டுப்பாடுகளையும் விதிக்க, மத்திய அரசு முடிவு செய்தது.

அதன்படி, 12 சதவீதத்துக்கும் மேல் ஆல்கஹால் கலந்த மருந்துகளை, தன்னிச்சையாக வாங்கவோ, விற்கவோ முடியாது எனும் வகையில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல், அந்த மருந்துகளை விற்பனை செய்ய முடியாது.

இந்த புதிய விதிகள், 2027 ஜனவரி முதல் அமலுக்கு வரும் நிலையில், இத்தகைய மருந்துகள் விற்பனை முற்றிலும் தடுக்கப்படும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.