எதிர்மறை எண்ணங்களுக்கு நோ சொல்லுங்க... இலக்கை அடையலாம் !

எதற்கெடுத்தாலும், எங்கேயும், யாரைப் பார்த்தாலும் என அனைத்தையும் புலம்புவது பலரிடமும் வாடிக்கையான ஒன்று.

புலம்பல் என்பது தப்பிக்கும் மனோபாவத்தின் வெளிப்பாடு. இது எளிமையான செயலும் கூட.

ஆனால், நமக்கானதை நாம் தான் தேட வேண்டும். வாழ்க்கையில் வெற்றி நடை போடுபவர்கள் அனைவருமே கடினப்பட்டுத்தான் ஜெயித்துள்ளனர்.

அவர்கள் சந்திக்காத வேதனைகள், அவமானங்கள் என எதுவுமே இல்லை. இதற்கு மாற்று கிடையாது.

ஆனால், வெறும் புலம்பலை வைத்துக்கொண்டு காலத்தை மட்டுமே தள்ள முடியும். வாழ்க்கையில் இலக்குகளை எப்போதுமே வெல்ல முடியாது.

இருப்பதை ஏற்றுக்கொள்வதும், விரும்புவதைப் போராடிப் பெறுவதுமே வாழ்க்கை. இல்லாவிட்டால், சுவாரஸ்யம் இருக்காது.

எனவே, எதற்கெடுத்தாலும் வீணாக புலம்புவதை விட்டுவிட்டு, வாழ்க்கையை மாற்றியமைக்க முயற்சியுங்கள்.

வெற்றியோ, தோல்வியோ எதுவாக இருப்பினும் இலக்கை நோக்கி கவனம் செலுத்தினால், வாழ்க்கையில் எளிதாக வெற்றி நடை போடலாம்.