புரோஸ்டேட் புற்றுநோய் அறிகுறிகளை தெரிந்து கொள்வோமா?
பெரும்பாலும், ஆண்களுக்கு ஏற்படும் புரோஸ்டேட் புற்றுநோய் குறித்து அவர்களுக்கே தெரியாமல், அறிகுறிகளை அலட்சியமாக விட்டு விடுகின்றனர்.
இந்த வகை புற்றுநோய் ரொம்ப மெதுவாக பரவும் தன்மை கொண்டது.
ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் குணப்படுத்தி விடமுடியும்.
60 வயதுக்கு மேல் உள்ளவர்கள், சிறுநீர் போவதில் சிக்கல், எரிச்சல், இரவு அதிகம் சிறுநீர் கழிக்க தோன்றுவது இதன் அறிகுறி.
இதற்கு, பி.எஸ்.ஏ., என்ற பரிசோதனை உள்ளது. இதை செய்து எளிதாக கண்டுபிடிக்க இயலும்.
பி.எஸ்.ஏ., அதிகம் இருந்தால் இப்புற்றுநோய் இருக்க வாய்ப்புண்டு. அதை தொடர்ந்து சில பரிசோதனைகள் தேவைப்படும்.
அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.