நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்தால்... புகைப்பதற்கு இணையான பாதிப்பு இது !
தினசரி பணி காரணமாக, நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் பலரும் உட்கார்ந்தே இருப்பர்.
இவர்களுக்கு இதய பாதிப்பு, நீரிழிவு, உடல் பருமன், முன்கூட்டியே இறப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வு தெரிவித்துள்ளது.
புகைப்பிடித்தல் ஏற்படுத்தும் பாதிப்புக்கு இணையாக நீண்ட நேரம் அமர்வது உள்ளதென டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
ஏனெனில், நம் உடல், நீண்டநேரம் உட்காரும் வகையில் வடிவமைக்கப்படவில்லை.
நீண்ட நேரம் அமர்வதால் ரத்த ஓட்டம் குறைகிறது.
கொழுப்பை எரிக்கும் நொதிகள் நிறுத்தப்படுகின்றன.
இன்சுலினும் அதிகரிக்கிறது என ஆய்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது.