முதுகுவலி தொடர்பான சில கட்டுக்கதைகளும்.. உண்மையும்...!

கட்டுக்கதை: படுக்கையில் ஓய்வெடுப்பது முதுகு வலிக்கு சிறந்த சிகிச்சை.

உண்மை: நீண்ட நேர ஓய்வு, தசைகளை பலவீனப்படுத்தும்; மூட்டுகளை விறைப்பாக்கும்; வலியை நீட்டித்து, குணமடைவதை தாமதப்படுத்தும்.

மென்மையான, மெதுவான செயல்பாடுகள் தான் முதுகு வலியிலிருந்து விடுபட உதவும்.

கட்டுக்கதை: அதிக எடை துாக்குவது முதுகு வலியை உண்டாக்கும்.

உண்மை: அதிக எடையை துாக்குவதால் முதுகெலும்பு பாதிக்கப்படுவதில்லை. ஆனால், முறையற்ற முறையில் துாக்குவது வலியை உண்டாக்கலாம்.

கட்டுக்கதை: உடற்பயிற்சி முதுகு வலியை மோசமாக்குகிறது.

உண்மை: சரியான உடற்பயிற்சி உண்மையில் முதுகு தசைகளை வலுப்படுத்தும்.