மேக்கப் இருக்கு.. ஆனா இல்லை... இதான் இப்போ டிரெண்ட்

மேக்கப் போட்டிருப்பது போல் தெரியாத, ஒரு 'மினிமல் மேக்கப்' தோற்றம்தான், இன்றைய இளம்பெண்கள் மத்தியில் டிரெண்டாக உள்ளது.

இயற்கையான அழகை முன்னிலைப்படுத்தும், இந்த மினிமல் மேக்கப் தோற்றத்தை எளிதாகப் பெற அதிக பவுண்டேஷன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

அதற்கு பதிலாக 'டிண்டட் சன்ஸ்கிரீன்' அல்லது எஸ்.பி.எப். கலந்த 'ஸ்கின் டின்ட்' போன்றவற்றை முயற்சி செய்யுங்கள்.

இது சருமத்திற்குத் தேவையான பாதுகாப்பை வழங்குவதோடு, ஒரு சீரான நிறத்தையும் உடனடிப் பொலிவையும் தரும்.

ஐப்ரோ பென்சிலால், புருவங்களிலுள்ள இயற்கையான இடைவெளிகளை மட்டும் லேசாக நிரப்பினால் போதும். இது முகத்துக்கு நேர்த்தியான, 'கிளாசிக்' தோற்றத்தை தரும்.

புருவங்களை பிரேம் செய்யுங்கள், புதிதாக வரைய வேண்டாம் என்பதே முக்கியம்.

இதை பின்பற்றினால் 'நோ மேக்கப்' லுக்கில் இயற்கையாகவும், அழகாகவும் ஜொலிக்கலாம் என்பது பியூட்டீசியன்களின் அட்வைஸாகும்.

கருப்பு நிற ஐ-லைனருக்கு பதிலாக, 'பிரவுன்' நிற ஐ-லைனர் மற்றும் மஸ்காராவை பயன்படுத்தினால், கண்களுக்கு இயற்கையான அழகை அளிக்கும்.

உதடுகளுக்கு பயன்படுத்தும், 'லிப் டின்ட்'- ஐ கன்னங்களுக்கு 'பிளஷ்' ஆக, கண் இமைகளுக்கு 'ஐ ஷேடோ' ஆக பயன்படுத்தினால், முகத்திற்கு, இயற்கையான இளஞ்சிவப்பு நிறத்தை தரும்.