ஆரஞ்சு தோலிலுள்ள ஆரோக்கிய சத்துகள் இவை !
வீண் என குப்பையில் போடக்கூடிய ஆரஞ்சு தோலில் நார்ச்சத்து, வைட்டமின் சி உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
இதிலுள்ள ஃபோலேட், ரிபோஃப்ளேவின், தியாமின், பி6, கால்சியம் போன்றவை நீரிழிவு, உடல் பருமன் மற்றும் அல்சைமர் போன்ற நாள்பட்ட பாதிப்புகளை கட்டுப்படுத்த உதவும்.
ஃபிளாவனாய்டு ஹெஸ்பெரிடின் பண்புகள் ரத்தக் கொழுப்பு, ரத்த அழுத்த அளவைப் பராமரிப்பதால், இதயம் தொடர்பான பாதிப்புகளை தவிர்க்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஆரஞ்சு தோல்களிலுள்ள வலுவான ஃபிளாவனாய்டு கலவைகள் உயிரணுக்களில் புற்றுநோயை உண்டாக்கும் புரதத்தை கட்டுப்படுத்துகிறது.
இதிலுள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது.
ஆரஞ்சு தோலிலுள்ள வைட்டமின் சி நுரையீரலிலுள்ள சளியை வெளியேற்ற உதவும்; நுரையீரல் தொற்றுகளைத் தடுப்பதுடன், உடலில் நோய் எதிர்ப்புச்சக்தியை மேம்படுத்துகிறது.
கரும்புள்ளிகள், இறந்த சரும செல்கள், முகப்பருக்களை குறைக்க உதவுவதால், பெரும்பாலான சரும கிரீம்களில் மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஆரஞ்சு தோல் பொடியை பாலில் கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து, தண்ணீரில் கழுவி சுத்தப்படுத்தவும். இது சருமத்தை பொலிவாகவும், இளமையாகவும் வைக்க உதவும்.
எனவே, சத்துகள் நிறைந்த ஆரஞ்சு தோல்களை மெல்லிய சிலைஸ்களாக வெட்டி சாலட்கள் அல்லது ஸ்மூத்திகளில் சேர்க்கலாம்.
தயிர், ஓட்ஸ், வேகவைத்த காய்கறிகள் ஆகியவற்றுடன் கலந்து சாப்பிடும் போது, வித்தியாசமான சுவையாக இருப்பது மட்டுமின்றி நிறைவான சத்துகள் உணவில் சேரக்கூடும்.