இந்தியாவின் மலைத்தொடர்கள் இவை

இமயமலை... இந்தியாவிலேயே நீளமானது இது; 7,200 மீட்டர் உயரமுடையது. சிந்து, பிரம்மபுத்திரா, கங்கை போன்ற வற்றாத நதிகள் இங்கு தான் உற்பத்தியாகின்றன.

பூர்வாஞ்சல் மலை... இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா, மிசோரம் வரை பரந்து விரிந்து காணப்படுகிறது இது.

காரகோரம், பீர்பாஞ்சல் மலை... இமயமலையின் வடமேற்கு பகுதியில் இம்மலைகள் அமைந்துள்ளன. அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான் எல்லையுடன் இணைந்துள்ளன.

மேற்கு தொடர்ச்சி மலை... தமிழகத்தில் மிகவும் பிரபலமானது. கன்னியாகுமரியில் துவங்கி குஜராத் மாநிலம், தபதி நதி வரை விரிந்துள்ளது. ஏராளமான சுற்றுலாத் தலங்களை கொண்டுள்ளது.

விந்திய மலை... இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மிகப் பழமையான மலை. வாரணாசியில் துவங்கி, மத்திய பிரதேசம் வழியாக குஜராத் வரை, கிழக்கு - மேற்காக பரவியுள்ளது.

சத்புரா மலை... குஜராத் மாநிலம் அரபிக்கடல் பகுதியில் துவங்கி மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலம் வரை அடர்ந்த காடுகளைக் கொண்டது.

ஆரவல்லி மலை... உலகளவில் மிக பழமையான மலை என கண்டறியப்பட்டுள்ளது. இது, 800 கி.மீ., நீளமுள்ளது. இதில், ராஜஸ்தானில் அமைந்துள்ள மவுன்ட் அபு, புகழ்பெற்ற சுற்றுலாத் தலம்.

கிழக்கு தொடர்ச்சி மலை... இந்தியாவின் கிழக்கு எல்லையான வங்காள விரிகுடாவின் கிழக்கு கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. தொடர்ச்சியற்றதும், உயரம் குறைவானதுமாக உள்ளது.