நீலகிரி கோடை சீசன் எதிரொலி மே 1 முதல் போக்குவரத்து மாற்றம்

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் நிலவி வருவதால், வாகன நெரிசலை தவிர்க்க, வரும் 1 முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களைத் தவிர, அனைத்து கனரக வாகனங்களும் காலை 8 மணி முதல், இரவு 9 மணி வரை ஊட்டி நகருக்குள் வர அனுமதி இல்லை.

குறிப்பாக பால், பெட்ரோல் மற்றும் (LPG ) எரிவாயு சமையல் சிலிண்டர் போன்ற அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டும் நகருக்குள் செல்ல அனுமதிக்கப்படும்

மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் கார்கள் அனைத்தும் காட்டேரி சந்திப்பிலிருந்து, கெந்தளா, கேத்தி பாலாடா, லவ்டேல், மஞ்சனக்கொரை வழியாக ஊட்டி நகருக்கு வர வேண்டும்

மேட்டுப்பாளையத்தில் இருந்து கூடலுார், தெப்பக்காடு செல்லும் அனைத்து சுற்றுலா பஸ்கள், லவ்டேல் சந்திப்பிலிருந்து மஞ்சனகொரை, காந்தள் முக்கோணம், பிங்கர் போஸ்ட் வழியாக கூடலுார் செல்ல வேண்டும்

ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சுற்றுலா வாகனங்கள் கோத்தகிரி வழியாக மட்டுமே செல்ல வேண்டும்

கூடலுாரில் இருந்து ஊட்டிக்கு வரும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் 'கால்ப் கிளப்' பகுதியில் நிறுத்தப்படும்.

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் காவல்துறையின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.