உளுத்தம் பருப்பு லட்டு ரெசிபி

தேவையான பொருட்கள்: உளுத்தம் பருப்பு (வெள்ளை அல்லது கருப்பு) - 1 கப், பொடித்த வெல்லம் - முக்கால் கப், முந்திரி, ஏலக்காய் துாள், நெய் -தேவையான அளவு.

உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்து, மிக்ஸியில் பொடித்து, சலித்து கொள்ளவும்.

உளுத்த மாவில் வெல்லம், ஏலக்காய் துாள், வறுத்த முந்திரி சேர்த்து கலக்கவும்.

நெய்யை உருக்கி, மாவு கலவையில் சேர்த்து, கை பொறுக்கும் சூட்டில் இருக்கும் போதே உருண்டைகளாக பிடிக்கவும்.

இப்போது, ஆரோக்கியமான மற்றும் சுவையான உளுத்த மாவு லட்டு ரெடி.

இப்போது, ஆரோக்கியமான மற்றும் சுவையான உளுத்த மாவு லட்டு ரெடி.