கணபதியே வருவாய்.. இன்று விநாயகர் சதுர்த்தி...!

விநாயகரை வழிபட உடனடியாக பலன் கிடைக்கும் என்பதை 'கணபதி பூஜை கைமேல் பலன்' என்பார்கள்.

விநாயகரை முழுமுதல் கடவுளாக வழிபடுவதற்கு பெயர் 'காணாபத்யம்'. இதன்படி படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களை நடத்தி பிரபஞ்சத்தை விநாயகரே இயக்குகிறார்.

கடவுள் உயர்ந்தவராக இருந்தாலும் அவரைத் தாங்கும் சக்தி நம் மனதிற்கு உண்டு என்பதை உணர்த்தவே, பெரிய உருவம் கொண்ட விநாயகருக்கு சிறிய மூஞ்சூறுவை வாகனமாக அமைத்தனர்

வக்ர துண்டர், மகோத்ரதர், கஜானனர், லம்போதரர், விகடர், விக்னராஜர், துாம்ரவர்ணர், சூர்ப்பகர்ணர் என்னும் எட்டு அவதாரங்களை விநாயகர் எடுத்துள்ளார்.

நடனக்கலையில் வல்லவரான சிவனைப் போல விநாயகரும் நாட்டியம் ஆடுவதில் வல்லவர். நர்த்தன விநாயகரை வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.