பல் கூச்சத்தை தவிர்க்க என்ன செய்யலாம்?
பல் கூச்சம் என்பது ஒரு பொதுவான பிரச்னை மற்றும் உலகில் உள்ள மக்களில் 70 சதவீதம் பேர், இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சூடான, மிகவும் குளிர்ந்த உணவு அல்லது மிகவும் இனிப்பான மற்றும் புளிப்பான உணவுகளை சாப்பிட்டால், பல் கூச்சம் ஏற்படும்.
பல் கூச்சம் ஏற்படுவது சிறிய பிரச்னையாக தோன்றினாலும் பற்சிதைவிற்கான ஆரம்ப அறிகுறிகள் ஆகும்.
சரியாக பராமரிக்காத பட்சத்தில் பல் நோய்களுக்கு வழி வகுக்கும்.
இனிப்புகளில் உள்ள சர்க்கரை நமது உமிழ்நீரில் உள்ள பாக்டீரியாக்கள் மூலம் அமிலமாக மாறி பல் மேற்பரப்பை கரைக்கிறது.
அதனால் தினமும் இரு முறை மென்மையான டூத் பிரஷ் மூலம் பல் துலக்க வேண்டும்.
இனிப்பு சாப்பிட்ட பின் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும்.
பிரச்னையை போக்க கிராம்பு எண்ணெயை, ஈறுகளில் மெதுவாக மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்; தினமும் இருதடவை செய்யலாம்.