மெனோபாஸ் ஜின்ஜிவிடிஸ் என்றால் என்ன?

மெனோபாஸ் எனும் மாதவிடாய் நிறுத்தம் என்பது பொதுவாக பெண்களுக்கு 45-55 வயதிற்குள் ஏற்படும் இயற்கையான ஹார்மோன் மாற்றமாகும்.

மாதவிடாய் நிற்கும் வயதில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் வாய் உலர்வு, வாய் எரிச்சல், தொற்றுகளின் அபாயம் அதிகரிக்கலாம்.

இதை ஜின்ஜிவிடிஸ் (Gingivitis) என மருத்துவ உலகில் அழைக்கப்படுகிறது.

மேலும் ஜின்ஜிவிடிஸ் என்பது ஈறுகளில் ஏற்படும் வீக்கம், இது மெனோபாஸ் ஹார்மோன் மாற்றங்களால் பலருக்கும் வரக்கூடும்.

ஈறுகளில் வீக்கம், ரத்தப்போக்கு, வலி, வாயில் புண்கள், வாய் துர்நாற்றம், ஈறுகள் பின்வாங்குதல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

மேலும், எலும்பு தேய்மானம் காரணமாக, பற்களை தாங்கும் எலும்புகள் பாதிக்கப்படலாம். இதனால், பற்கள் தளர்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

மேலும் »

இதை தவிர்க்க தினமும் இருமுறை பல் துலக்குதல், ஃப்ளாஸ் செய்தல் அவசியம்.

பிரச்னை இருப்பின் பல் மருத்துவர் அல்லது மகப்பேறு மருத்துவரை அணுகுவது அவசியம்.