இதய பாதிப்புக்கு ஸ்டென்ட், பைபாஸ் சர்ஜரி எது தீர்வாக இருக்கும்?
இதய பாதிப்பு என்றவுடனேயே பலருக்கும் அச்சம் உண்டாவது இயல்பானதே. ஆரோக்கியமான உணவு, துாக்கம், உடற்பயிற்சி செய்து கட்டுக்குள் வைக்க வேண்டும்.
அப்படியும் பிரச்னை வந்தால், மருந்து, மாத்திரைகள் சாப்பிடலாம். இதிலும் தீர்வு கிடைக்காவிடில், ஸ்டென்ட், பை - பாஸ் என்று மற்ற வாய்ப்புகளுக்கு செல்ல வேண்டும்.
ஆனால், பாதிப்பு ஏற்பட்டவுடனேயே முதலில் இ.சி.ஜி., சோதனை, அதன்பின் எக்கோ கார்டியோகிராம் எடுக்க வேண்டும்.
இதில் அறிகுறிகள் தெரிந்தால் கொரனரி ஆஞ்சியோகிராம் எடுத்து ரத்தக்குழாயில் அடைப்பின் தன்மை குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
இது எவ்வளவு சதவீதம், எத்தனை குழாய்களில், எந்தெந்த இடங்களில் அடைப்பு என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தொடர்ந்து, வேறு நோய்கள், உடல் தாங்கு திறன் பொறுத்து 'ஸ்டென்ட்', 'பைபாஸ் சர்ஜரி எது தீர்வாக இருக்கும் என்பதை தீர்மானிக்க முடியும்.