வாடகைத்தாயாக யாரை பயன்படுத்தலாம்? சட்டம் சொல்வதென்ன?
செயற்கை கருத்தரிப்பு முறைக்கு, பெண்கள் 50 வயது வரை; ஆண்கள், 55 வயது வரை மட்டுமே செய்துகொள்ள முடியும்.
அதற்கு மேற்பட்ட வயது என்றால், கோர்ட் அனுமதி பெற வேண்டும்.
கர்ப்பப்பை இல்லாத பெண்கள், கர்ப்பமானால் இறக்கும் நிலையில் இதய கோளாறு, பிற நோய் உள்ளவர்கள் மட்டுமே வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற முடியும்.
இதுதவிர 10 முறை ஐ.வி.எப்., செய்து தோல்வியடைந்தவர்களும் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெறலாம்.
வாடகைத்தாயாக வருபவர்கள் சொந்தங்களாகவும், தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.
இம்முறையில் குழந்தை பிறந்தால் வாடகைத்தாய்க்கு குழந்தை மீதும், குழந்தைக்கு வாடகைத்தாய் மீதும் சட்ட ரீதியாக எவ்வித உரிமையும் இல்லை.