சீரற்ற மாதவிடாய் உண்டாவது ஏன்? எப்போது டாக்டரை பார்க்க வேண்டும்?
ஹார்மோன் மாற்றங்கள், பி.சி.ஓ.எஸ். கர்ப்பப்பையில் கட்டி இருந்தால், வாழ்வியல் மாற்றம் சார்ந்த பழக்கங்கள் ஆகியவை சீரற்ற மாதவிடாய்க்கு காரணங்களாகும்.
இதுதவிர, தைராய்டு பிரச்னை, அதிக உடல் எடை போன்றவையும் முக்கிய காரணங்கள்.
வழக்கமாக, 28 நாட்கள் என்பது சரியான சுழற்சி.
இதில், ஐந்து நாட்கள் முன்னும், பின்னும் அதாவது, 23 நாட்கள் - 33 நாட்கள் சுழற்சி இருப்பது தவறில்லை.
பொதுவாக மாதவிடாய் காலத்தில் 3 முதல் 7 நாட்கள் ரத்தப்போக்கு இயல்பானது. 50 - 70 எம்.எல்., அளவு ரத்தப்போக்கு இருக்கலாம்.
இதில் ஏதாவது மாற்றங்கள் இருந்தாலும், அதிக ரத்தப்போக்கு, வலி மற்றும் கட்டியாக ரத்தம் வெளியேறுதல் இருப்பின் டாக்டரை அணுக வேண்டும்.