/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கொத்தடிமையாக வேலை பார்த்த ஒடிஷா மாநிலத்தவர் 78 பேர் மீட்பு
/
கொத்தடிமையாக வேலை பார்த்த ஒடிஷா மாநிலத்தவர் 78 பேர் மீட்பு
கொத்தடிமையாக வேலை பார்த்த ஒடிஷா மாநிலத்தவர் 78 பேர் மீட்பு
கொத்தடிமையாக வேலை பார்த்த ஒடிஷா மாநிலத்தவர் 78 பேர் மீட்பு
ADDED : மார் 08, 2026 06:00 AM

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே அயநல்லுார் கிராமத்தில், என்.கே.எஸ்., என்ற பெயரில் தனியார் செங்கல் சூளை இயங்கி வருகிறது. இங்கு, ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், தலா ஒருவருக்கு 30,000 ரூபாய் பெற்று குடும்பத்துடன் வசித்தபடி, நான்கு மாதங்களாக வேலை பார்த்து வந்தனர்.
அவர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏதும் ஏற்படுத்தி தராமல் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாக, ஒடிஷா மாநில அரசுக்கு தகவல் கிடைத்தது. பின், தமிழக அரசு மூலம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதன்படி, பொன்னேரி கோட்டாட்சியர் ரவிசந்திரன் மேற்பார்வையில், கும்மிடிப்பூண்டி தாசில்தார் சுரேஷ்பாபு தலைமையிலான வருவாய் துறையினர், செங்கல் சூளையில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கு, கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த 25 பெண்கள், 32 ஆண்கள் உட்பட, அவர்களது 21 குழந்தைகள் என, மொத்தம் 78 பேர் மீட்கப்பட்டனர். அனைவரும், அருகில் உள்ள ரெட்டம்பேடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களை ஊருக்கு அனுப்பி வைக்கும் வேலைகளை வருவாய் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக, செங்கல் சூளை நிர்வாகத்தினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

