ஷார்ட் நியூஸ் 1 / 10
அரசியல்
மார்ச் 04,2021
நாங்கள் வெளியாட்கள் என்றால் அகிலேஷ் யார்?
நாங்கள் வெளியாட்கள் என்றால் அகிலேஷ் யார்?
3
- மேற்கு வங்கம் வெளியாட்கள் பிடியில் சென்றுவிடக் கூடாது என மம்தா பிரசாரம்
- அவருக்கு ஆதரவளிக்கும் அகிலேஷ், தேஜஸ்வி யார் என பா.ஜ கேள்வி எழுப்பியுள்ளது
- 'ஆண்டி உங்களின் ஒரே பிரச்னை மோடி. இது அனைவருக்கும் தெரியும்' என கிண்டல்
பொது
மார்ச் 04,2021
கோல்கட்டாவில் ஒரு கப் தேநீர் விலை ரூ.1,000
கோல்கட்டாவில் ஒரு கப் தேநீர் விலை ரூ.1,000
5
- இந்தியாவில் பெரும்பாலான மக்களின் வாழ்க்கை, தேநீர் குடிப்பதில் துவங்குகிறது
- கோல்கட்டாவில் உள்ள கடையில் 'போ லே' கப் தேநீர் ரூ.1,000க்கு விற்கப்படுகிறது
- 'போ லே' வகை தேநீர் தயாரிக்க உதவும் டீ தூளின் விலை 1 கிலோ ரூ. 3 லட்சமாம்
பொது
மார்ச் 04,2021
காப்பீடு புகார்களை இனி ஆன்லைனில் வழங்கலாம்
காப்பீடு புகார்களை இனி ஆன்லைனில் வழங்கலாம்
1
- மத்திய அரசு 'காப்பீட்டு குறைதீர்ப்பாளர் விதி 2017'ல் மாற்றங்கள் செய்துள்ளது
- இதனால் காப்பீட்டு பாலிசிதாரர்கள் 'ஆன்லைன்' மூலமாக புகார்களை அளிக்க முடியும்
- ஆன்லைனிலேயே நாம் அளித்துள்ள புகார்களின் நிலையை கண்காணிக்கவும் முடியும்.
சம்பவம்
மார்ச் 04,2021
'5 மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறையவில்லை'
- கோவை, திருப்பூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறையவில்லை
- அனைவரும் முககவசம் அணிய வேண்டும். மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
- சென்னையில் ஆய்வு நடத்திய சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்
சம்பவம்
மார்ச் 04,2021
13 ஆயிரம் வீரர்களை சேர்க்க அனுமதி
- நேபாளம், பூடான் எல்லைகளில் பாதுகாப்பை எஸ்.எஸ்.பி பிரிவு கவனித்து வருகிறது
- இந்த படைப்பிரிவின் தேவைகள் குறித்து கடந்த 2019ல் அமித்ஷா ஆய்வு மேற்கொண்டார்
- 13 ஆயிரம் வீரர்களைக் கொண்ட, 12 பட்டாலியன்களை புதிதாக உருவாக்க ஒப்புதல்
பொது
மார்ச் 03,2021
24 மணி நேரமும் தடுப்பூசி - மத்திய அரசு அறிவிப்பு
- கொரோனா ஊசிக்கு தகுதியானவர்களுக்கு வசதியான நேரங்களில் ஊசி செலுத்தலாம்
- மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மருத்துவமனைகளுக்கு இந்த அனுமதி தந்தார்
- 1.56 கோடி மக்கள் இதுவரை நாட்டில் கொரோனா தடுப்பூசி பெற்றுள்ளனர்
பொது
மார்ச் 03,2021
தமிழகத்தில் மேலும் 494 பேர் கொரோனாவிலிருந்து நலம்
- தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து 494 பேர் மீண்டுள்ளனர்.
- புதனன்று கொரோனா உறுதியானவர்களில், 294 பேர் ஆண்கள், 195பேர் பெண்கள்
- புதனன்று இருவர் உயிரிழந்ததால் கொரோனா இறப்பு ஒட்டுமொத்தமாக 12,504 ஆனது
அரசியல்
மார்ச் 03,2021
அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்: சசிகலா அறிக்கை
அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்: சசிகலா அறிக்கை
24
- பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ,அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை
- பொது எதிரியின் ஆட்சி அமையாது தடுத்து ஜெ., ஆட்சி அமைய பாடு பட வேண்டும்
- அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெ., ஆட்சி அமைய பிரார்த்திப்பேன் என்றார்
அரசியல்
மார்ச் 03,2021
தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நல்ல முறையில் செல்கிறது
தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நல்ல முறையில் செல்கிறது
35
- அதிமுக - பா.ஜ., உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுப்பறி
- இந்நிலையில், இன்றும் இரு கட்சி தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
- பேச்சுவார்த்தை நல்ல முறையில் செல்வதாக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் கூறினார்
பொது
மார்ச் 03,2021
தமிழ் வழி படிப்பில் சேரும் மாணவர்கள் அதிகரிப்பு
தமிழ் வழி படிப்பில் சேரும் மாணவர்கள் அதிகரிப்பு
15
- தமிழ் வழியில் படித்த பட்டதாரிகளுக்கு அரசு பணிகளில், 20% இட ஒதுக்கீடு உண்டு
- புதிய சட்டப்படி 6 முதல், 10ம் வகுப்பு வரை தமிழில் படித்திருக்க வேண்டும்
- இதனால் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது