sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

சிங்கப்பூர்

/

செய்திகள்

/

சிங்கப்பூரில் மாணவர்களை ஊக்குவித்த நல்லிணக்க நோன்பு துறப்பு நிகழ்ச்சி

/

சிங்கப்பூரில் மாணவர்களை ஊக்குவித்த நல்லிணக்க நோன்பு துறப்பு நிகழ்ச்சி

சிங்கப்பூரில் மாணவர்களை ஊக்குவித்த நல்லிணக்க நோன்பு துறப்பு நிகழ்ச்சி

சிங்கப்பூரில் மாணவர்களை ஊக்குவித்த நல்லிணக்க நோன்பு துறப்பு நிகழ்ச்சி

1


மார் 12, 2026

Google News

மார் 12, 2026

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), நல்லிணக்க நோன்பு துறப்பு நிகழ்ச்சியை நடத்தியது.


சங்கத் தலைவர் முனைவர் மு. அ. காதர் ஆற்றிய வரவேற்புரையில் “கல்வி சார்ந்த சமூக நலப்பணிகளை ஆற்றிவரும் இச்சங்கம் கடந்த 15 ஆண்டுகளில் 150 நிகழ்ச்சிகளை நடத்தி சாதனைப் படைத்திருக்கிறது என்றும், நல்லிணக்க்தை மேம்படுத்தி ஒன்றுபட்ட சமூகமாகத் திகழ்வதற்கு இதுபோன்ற நோன்பு துறப்பு நிகழ்ச்சிகளை தொடர்ந்து சங்கம் நடத்தி வருகிறது” என்று குறிப்பிட்டார்.


சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சட்ட அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சு மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை, சங்கத்தின் 15 ஆண்டுகால நற்பணிகளைப் பாராட்டி பேசியதுடன், ஒன்றுபட்ட சமூகமாக ஒருங்கிணைந்து செயல்படுவது மிகவும் அவசியம் என்று எடுத்துரைத்தார்.


சங்கம் ஆற்றிவரும் கல்விப்பணியின் ஓர் அங்கமாக, தொடக்க நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.


பென்கூலன் பள்ளிவாசல் இமாம் மௌலவி கலீல் அஹமது ஹசனீ, புனித ரமலான் மாத சிறப்புகளைப் பற்றியும் நற்பண்புகளைப் பற்றியும் சிற்றுரையாற்றினார்.


பல்வேறு சமூக அமைப்புகளின் தலைலர்கள், செயலவை உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், தமிழ் ஆர்வலர்கள், பேராசியர்கள், மாணவர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் சுமார் 200 பேர் கலந்துகொண்டனர்.


சங்கச் செயலவை உறுப்பினர் நூர் முஹம்மது ஹபீபுல்லாஹ் நிகழ்ச்சியை வழிநடத்தினார்.


- சிங்கப்பூரிலிருந்து நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்



Advertisement

Advertisement


Ram

மார் 14, 2026 07:04

இதை அப்படியே கட்டாயமாக்கி மதப்பிரச்சாரத்திற்கு பயன்படுத்தமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்

Rate this



இதை அப்படியே கட்டாயமாக்கி மதப்பிரச்சாரத்திற்கு பயன்படுத்தமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்

Rate this


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us