தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/ சமத்துவ இஃப்தார் ஒன்றுகூடல் - 2026

சமத்துவ இஃப்தார் ஒன்றுகூடல் - 2026

சமத்துவ இஃப்தார் ஒன்றுகூடல் - 2026


மார் 12, 2026

Google News

மார் 12, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சமத்துவ இஃப்தார் ஒன்றுகூடல் - 2026
புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு ஜெத்தா தமிழ் கலாச்சார மையம் (JTCC) நடத்திய சமத்துவ இஃப்தார் நிகழ்ச்சி நடந்தது.
கடந்த மார்ச் 10 ஆம் தேதி சவுதி அரேபியா, ஜெத்தா மாநகர் அல் ரிஹாப் - இம்பீரியம் ஹாலில் நடைபெற்ற சமத்துவ இஃப்தார் நிகழ்ச்சியில் சுமார் 250க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் தமிழ்மணம் மாறாத நோன்பு கஞ்சி மற்றும் சிற்றுண்டிகள் நோன்பு திறக்க வழங்கப்பட்டது.
இஃப்தார்க்கு பின் நடைபெற்ற நிகழ்ச்சியை துணைத் தலைவர் ஜமீல்தீன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார், பொருளாளர் அல்அமீன் வரவேற்புரை நிகழ்த்தினார். இளைஞர் நலன் துணை செயலாளர் அகமது இப்ராஹிம் நிகழ்ச்சி ஏற்பாட்டை கவனித்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியின் சிறப்புரையாக அள்ளிக் கொடுக்கும் ரமலான் என்ற தலைப்பில் IWF இர்ஃபான் அவர்களும், ரமலான் கூறும் உளவியல் என்ற தலைப்பில் லிட்டில் விங்க்ஸ் அறக்கட்டளையின் நிறுவனரும், குடும்ப நல ஆலோசகருமான பானு ஹமீத் சிறப்புரையாற்றினர்.
துணைத்தலைவர் ஜமீல்தீன் ஜெத்தா தமிழ் கலாச்சார மையம் கடந்த ஆண்டில் செய்த சேவைகள் மற்றும் நிகழ்ச்சிகளின் தொகுப்பை ஆண்டு அறிக்கை 2025-2026 சமர்ப்பித்து, மேலும் 2026-2027 ஆண்டுக்கான திட்டம் மற்றும் அடைய வேண்டிய இலக்கினைப் பற்றி உரையாற்றினார்.
ஜெத்தா தமிழ் கலாச்சார மையத்தின் தலைவர் இஸ்மாயில் ஷரீப், செயலாளர் அப்துல் சமது, இளைஞர் நலன் செயலாளர் சித்திக் அகமது லெப்பை ஆகியோரின் ஆலோசனைப்படி சிறப்பாக நடைபெற்ற இந்த சமத்துவ இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.மக்கள் நலப்பணி பிரிவின் செயலாளர் முகமது அப்பாஸ் நன்றி உரையுடன் நிகழ்ச்சி நிறைவு செய்யப்பட்டது.
- ஜெத்தாவில் இருந்து அல் அமீன்


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us