வாடிக்கையான வாசகர்களுக்கு மட்டும் தான் அந்துமணியின் பதில்கள் கிடைக்குமா?
வாடிக்கையான வாசகர்களுக்கு மட்டும் தான் அந்துமணியின் பதில்கள் கிடைக்குமா?
UPDATED : நவ 18, 2026 05:15 AM
ADDED : நவ 18, 2026 01:51 AM

குற்றச்சாட்டுக்கு உள்ளானவரிடம் விசாரணை முடித்ததும், சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கும் வரை, குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை சிறையில் வைத்திருக்க, நம் சட்டம் இடம் கொடுக்கவில்லை; அதனால் இப்படி நடக்கிறது!
அப்படியா... உங்கள் கடிதங்களுக்கு கூட பதில் எழுதி இருக்கிறேனே நடராஜன்... நீங்கள் வாடிக்கையான வாசகர் தானே! உங்கள் நண்பரிடம் காட்டுங்கள்!
கண்டிப்பாக வந்திருக்கும். இவ்விஷயத்தில் விஜய், மவுனம் காப்பதை விட, கட்சி ரீதியான நடவடிக்கை எடுத்து, நிரபராதியாக இருந்தால், நிரூபணமான பின், மீண்டும் பதவி கொடுக்கலாமே! மகளிர் ஆணையம், தானாக முன்வந்து வழக்கு பதியும் வரை, காத்திருந்திருக்க வேண்டாமே! தன் மவுனம், கட்சியினர் மீண்டும் மீண்டும் தவறு செய்யத் துாண்டி விடும் என்பதை, விஜய் புரிந்து கொள்ள வேண்டும்!
இவர் அதிகம் நேசிக்கும் நெருங்கிய பெண் உறவினர் ஒருவருக்கு, 'வாட்ஸாப்'பில், விரும்பத் தகாத வகையில் தகவல்கள் வந்தால், இவரால் சும்மா இருக்க முடியுமா?
நீதிபதிகள், மிகச் சரியாக சொல்லி இருக்கின்றனர். அமைச்சர்களுக்கு, அரசு நிர்வாகத்தை எப்படி நடத்த வேண்டும் என்று, இன்னும் புரியவில்லை. கைதேர்ந்த அதிகாரிகள், நேர்மையான முறையில் நிர்வாகம் செய்ய அமைச்சர்களுக்குச் சொல்லிக் கொடுக்கக் கடமைப்பட்டுள்ளனர். அதற்கு இன்னும் காலம் ஆகும். இப்போதைக்கு பேட்டி மட்டும் கொடுத்து, அமைச்சர்கள் சமாளிக்கின்றனரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. அதன் விளைவு தான், இந்த இயலாமை!
சீனாவின் சிறப்பு கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங் பகுதியைச் சேர்ந்தவர் ஜாக்கிசான். கம்பு சுற்றி, நிறைய சாகசங்கள் செய்தபடி படங்களில் தோன்றுவார். அவரின் ரசிகர் போலிருக்கிறது, எலன் மஸ்க். இந்த தொழிலதிபர், நம் நாட்டுக்கு எதிரி போல செயல்பட்டாலும், அவரின் திறமையைப் பாராட்டியே தீர வேண்டும். அதுவும், விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட், தன் பணியை முடித்து, பூமிக்குத் திரும்பும்போது, அதை லாவகமாக, ஏவிய இடத்திலேயே பிடித்த செயல், மிகவும் ஆச்சரியப்பட வைக்கிறது!
