தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தலைவர் வழியில் 'ரீல்ஸ்' மோகத்தில் ஆழ்ந்து கிடக்கும் அமைச்சர்கள்: பழனிசாமி கடும் விமர்சனம்

தலைவர் வழியில் 'ரீல்ஸ்' மோகத்தில் ஆழ்ந்து கிடக்கும் அமைச்சர்கள்: பழனிசாமி கடும் விமர்சனம்

தலைவர் வழியில் 'ரீல்ஸ்' மோகத்தில் ஆழ்ந்து கிடக்கும் அமைச்சர்கள்: பழனிசாமி கடும் விமர்சனம்


ADDED : நவ 18, 2026 04:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2026 04:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'கட்சியின் தலைவர் வழியிலேயே, த.வெ.க., தொண்டர்கள் தொடங்கி, அமைச்சர்கள் வரை, 'ரீல்ஸ்' மோகத்தில் ஆழ்ந்துள்ளனர்,' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அவரது அறிக்கை: ஆட்சிக்கு வரும் முன்பும், வந்த பின்னும், 'ரீல்ஸ்'களை மட்டுமே, த.வெ.க., வெளியிடுகிறது. அந்த கட்சியின் தலைவர் எவ்வழியோ, அவ்வழியில் தொண்டர்கள் தொடங்கி, எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் வரை, அனைவருமே 'ரீல்ஸ்' மோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அமைச்சர்கள் யாரும் போலீஸ் நிலையங்களில் ஆய்வு செய்வதில்லை. ஆனால், முதல்வர் வசம் உள்ள உள்துறையின் கீழ் வரும், தக்கோலம், அரக்கோணம் போலீஸ் நிலையங்களை, அமைச்சர் காந்திராஜ், நள்ளிரவில் ஆய்வு செய்துள்ளார். பணியில் இருந்த பெண் போலீசின், மொபைல் போனை ஆய்வு செய்து 'ரீல்ஸ்' வெளியிட்டுள்ளார்.

பெண் காவலரின் மொபைல் போனை எந்த நோக்கத்தில் ஆய்வு செய்தார் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். திருச்செந்துார் சூரசம்ஹார விழாவில், முருகப்பெருமானுடன் முதல்வரையும் அமைச்சரையும் ஒப்பிட்டு, பாடகர்கள் வேல்முருகன், புஷ்பவனம் குப்புசாமி பாடியுள்ளனர். பக்தி மேடையை, துதிபாடும் மேடையாக மாற்றிய அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us