/
உலக தமிழர்
/
ஆசியா
/
செய்திகள்
/
ஸம்ஸ் ஸ்ரீலங்கா அமைப்பின் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு
/
ஸம்ஸ் ஸ்ரீலங்கா அமைப்பின் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு
ஸம்ஸ் ஸ்ரீலங்கா அமைப்பின் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு
ஸம்ஸ் ஸ்ரீலங்கா அமைப்பின் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு
மார் 12, 2026

ஸம்ஸ் ஸ்ரீலங்கா அமைப்பின் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு
ஸம்ஸ் ஸ்ரீலங்கா (SAMS Sri Lanka) அமைப்பின் உத்தியோகபூர்வ ரீ - சேர்ட் மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
அமைப்பின் உதவித் தலைவர் கிஸ்ரத் அவர்களின் புதிய கட்டிட வளாகத்தில், தலைவர் ஏ.ஜே. ஜனுபர் தலைமையில், செயலாளர் எம். அப்துல் ஹமீத் வழிகாட்டலில் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம். அப்துல் லத்தீப், பிரதேச சபையின் செயலாளர் சிஹாபுதீன், சிரேஷ்ட விரிவுரையாளர் சாஹிர், நிந்தவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிசாந்த வெதகே உட்பட பல முக்கிய அதிதிகள் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
நிகழ்வின் இறுதிப்பகுதியில், அமைப்பின் உத்தியோகபூர்வ ரீ-சேர்ட் அறிமுகம் செய்யப்பட்டதுடன், புதிய உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள், புதிய பதவிகள் மற்றும் அடையாள அட்டைகளும் வழங்கி வைக்கப்பட்டது.
- இலங்கையில் இருந்து எம்.எஸ்.எம்.ஸாகிர்
Advertisement