/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.101 கோடி நிதி ஒதுக்கீடு! 5 ஆண்டுகளில் 82,245 பேர் பயன் பெற்றனர்
/
மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.101 கோடி நிதி ஒதுக்கீடு! 5 ஆண்டுகளில் 82,245 பேர் பயன் பெற்றனர்
மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.101 கோடி நிதி ஒதுக்கீடு! 5 ஆண்டுகளில் 82,245 பேர் பயன் பெற்றனர்
மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.101 கோடி நிதி ஒதுக்கீடு! 5 ஆண்டுகளில் 82,245 பேர் பயன் பெற்றனர்
UPDATED : மார் 14, 2026 12:58 PM
ADDED : மார் 14, 2026 05:17 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் மாநில அரசு சார்பில் மாற்றுத் திறனாளிகள் 82 ஆயிரத்து 245 பேருக்கு, 101 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இம்மாவட்டத்தில் 31 ஆயிரத்து 154 பேருக்கு, தேசிய அடையாள அட்டை மற்றும் பதிவு புத்தகம், தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. பராமரிப்பு உதவித் தொகையாக மாதம் தோறு 2,000 ரூபாய் வீதம் 7,053 பேருக்கு மொத்தம் 78 கோடியே 83 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய்., அதிக உதவித் தேவைப்படுவோருக்கு மாற்றுத் திறனாளிகள் தங்களுடன் ஒரு உதவியாளரை வைத்துக் கொள்ள உதவித் தொகையாக மாதம் தோறும் 1,000 ரூபாய் வீதம் 426 பேருக்கு மொத்தம் 96 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய். சிறு மற்றும் குறுந்தொழில் செய்வதற்கு வங்கிக் கடன் மானியமாக 650 பேருக்கு ஒரு கோடியே 19 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையாக 2,512 பேருக்கு ஒரு கோடியே 32 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பயனாளிகள் 1099 பேருக்கு 10 கோடியே 56 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய ஊனமுற்றோர் நிதி மேம்பாட்டுக் கழகம் மூலம் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் சுய தொழில் கடனுதவியாக 76 பேருக்கு 43 லட்சம் ரூபாய் நிதியுதவி, ஆவின் பாலகம் அமைப்பதற்கு 22 பேருக்கு மானியத் தொகையாக 11 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள் திருமண நிதியுதவி திட்டத்தின் படி, 188 பேருக்கு 70 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய். நலவாரியத் திட்டத்தின் கீழ் 597 பேருக்கு 71 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் நிதியுதவி.
பிரதமரின் சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், 15 பேருக்கு மானியத் தொகையாக 3 லட்சத்து 16 ஆயிரம் நிதியுதவி. பயனாளிகள் 59 பேருக்கு 62 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பில், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்.
சட்டப்படிப்பு உதவித் தொகையாக 12 பேருக்கு 6 லட்சம் ரூபாய் நிதியுதவி மற்றும் 49 பேருக்கு வாசிப்பாளர் உதவித் தொகையாக ஒரு லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல், 43.5 லட்சம் ரூபாய் செலவில், 684 பேருக்கு மோட்டார் பொருத்திய தையல் மிஷின்கள். பார்வையற்ற மற்றும் செவித்திறன் பாதித்த 1,050 பேருக்கு, 1 கோடியே 26 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான திறன்பேசிகள். தசை சிதைவு நோய் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 112 பேருக்கு 1 கோடியே 17 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பேட்டரி சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளது.
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், 164 பேருக்கு 1 கோடியே 6 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் செயற்கை கால்கள் பொருத்தப்பட்டன. பயனாளிகள் 136 பேருக்கு 12 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு சக்கர நாற்காலிகள். 1,145 பேருக்கு 96 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நவீன காதொலி கருவிகள். 299 பேருக்கு 47 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மடக்கு சக்கர நாற்காலிகள். 239 பேருக்கு 27 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மூன்று சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுதும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், 101 கோடியே 58 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செயல்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 82 ஆயிரத்து 245 பேர் பயனடைந்துள்ளனர்.

