தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/வங்கி மற்றும் நிதி/ சரியும் வெளிநாட்டு வங்கிகள்

 சரியும் வெளிநாட்டு வங்கிகள்

 சரியும் வெளிநாட்டு வங்கிகள்


UPDATED : மார் 10, 2026 02:33 AM

ADDED : மார் 10, 2026 01:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 10, 2026 02:33 AM ADDED : மார் 10, 2026 01:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பை;ஒரு காலத்தில் இந்தியாவின் கிரெடிட் கார்டு சந்தையில் ஆதிக்கம் செலுத்திய வெளிநாட்டு வங்கிகள், தற்போது உள்நாட்டு வங்கிகளின் கடும் போட்டியால் பெரும் சரிவை சந்தித்து வருகின்றன.

இது குறித்து ரிசர்வ் வங்கியின் தரவுகள் மற்றும் 'கேர் ரேட்டிங்ஸ்' நிறுவன ஆய்வில் தெரிவித்ததாவது:

இந்தியாவில் முன்னணி வெளிநாட்டு வங்கிகளால் வழங்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்த கிரெடிட் கார்டுகள் எண்ணிக்கை, கடந்த 2025ம் ஆண்டில் முந்தைய 2024 உடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 6 சதவீதம் சரிவை கண்டுள்ளன.

இந்தாண்டு ஜனவரியில், வெளிநாட்டு வங்கிகளின் சந்தை பங்களிப்பு கிட்டத்தட்ட 5 சதவீதத்துக்கு கீழாக குறைந்துள்ளது. உள்நாட்டு வங்கிகள் இத்துறையில் வெகுவேகமாக விரிவடைந்து வருவதே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image 1546668

சரிவு கண்ட வங்கிகள்

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் 14.53 லட்சம் 13.34 லட்சம்

ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் 9.04 லட்சம் 6.69 லட்சம்

டி.பி.எஸ்., 4.94 லட்சம் 3.25 லட்சம்

முன்னேற்றம் கண்ட வங்கிகள்

எச்.எஸ்.பி.சி., 8.43 லட்சம் 9.60 லட்சம்

எஸ்.பி.எம்., இந்தியா

7.11 லட்சம் 8.04 லட்சம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us