ADDED : மார் 14, 2026 05:40 AM

புதுச்சேரி: புதுச்சேரி மகளிர் ஆணையத்தில், மக்கள் குறை தீர்வு வார நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, மகளிர் ஆணையத் தலைவி நாகஜோதி தலைமை தாங்கினார். செயலாளர் அமலோற்பவமேரி முன்னிலை வகித்தார். குழந்தைகள் மற்றும் பாதுகாப்பு ஆணைய தலைவர் சிவராமன் கருத்துரையாற்றினார். சட்ட அதிகாரி லட்சுமி சிறப்புரையாற்றினார். உறுப்பினர் சுஜாதா வாழ்த்தி பேசினார்.
இதில், பெண்கள் பலர் கலந்து கொண்டு தங்களது குறைகளையும், பிரச்னைகளை,ஆணைய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களிடம் தெரிவித்தனர். ஆணைய உறுப்பினர்கள், அதற்கான தீர்வுகள், சட்ட உதவிகள், பெண்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பது குறித்து விளக்கினர். நிகழ்ச்சியில், ஆணைய உறுப்பினர் அன்பரசி, பாகூர் பூங்கொடி, இந்திராணி, மலர்கொடி, நல்லாசிரியர் மண்ணாங்கட்டி, சத்யா மற்றும் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். ஆணைய உறுப்பினர் சந்திரா நன்றி கூறினார்.
